ஆலு மட்டர் – (உருளைக்கிழங்கு பட்டாணி கறி) (ALOO MATAR GRAVY)

Image result for ALOO MUTTER GRAVY IMAGES

தேவையான பொருட்கள்:

1. எண்ணெய் – 2 தேக்கரண்டி

2. சீரகம் – அரை தேக்கரண்டி

3. வெங்காயம் – முக்கால் கப் (நறுக்கியது)

4. பூண்டு – 1 தேக்கரண்டி (நறுக்கியது)

5. இஞ்சி – 1 தேக்கரண்டி (நறுக்கியது)

6. பச்சை மிளகாய் விழுது – 1 தேக்கரண்டி

7. தக்காளி – 1 கப் (நறுக்கியது)

8. தண்ணீர் – தேவையான அளவு

9. பச்சை பட்டாணி – 1 கப் (வேகவைத்தது)

10. உருளைக்கிழங்கு சதுரமாக நறுக்கியது – 1½ கப் (வேகவைத்தது)

11. உப்பு – தேவையான அளவு

12.மிளகாய் தூள் – 1 ½ தேக்கரண்டி

13. கரம் மசாலா – ½ தேக்கரண்டி

14. மஞ்சள் – ஒரு சிட்டிகை

15. கொத்தமல்லி இலை – 1 தேக்கரண்டி (நறுக்கியது)

செயல்முறை:

1. ஒரு நான்ஸ்டிக் பானை எடுத்து அதில் எண்ணெயைச் சேர்த்து சூடு படுத்துங்கள்.

2. எண்ணெய் சூடானவுடன் அதில் சீரகம் சேர்க்க வேண்டும். சீரகம் வெடிக்கத் தொடங்கியவுடன் அதில் நறுக்கப்பட்ட வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.

3. வெங்காயத்தின் நிறம் தங்க பழுப்பு நிறமாக மாறும் வரை நன்கு வதக்கவும்

4. இப்போது, பூண்டு, இஞ்சி, தக்காளி, மற்றும் பச்சை மிளகாய் பேஸ்டை சேர்க்கவும். உங்களுடைய தக்காளி வேக சிறிது நேரம் பிடிக்குமெனில், கலவையுடன் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் வேக விடுங்கள்.

5. இப்போது, கலவையை நன்கு கலக்கி, தக்காளியை நன்கு மசித்து விடுங்கள். கலவை நன்கு சமைத்த பிறகு அதில் பச்சை பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை சேர்க்க வேண்டும்.

6. இப்போது கலவையில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

7. இப்போது, கலவையுடன் ஒரு கப் தண்ணீற் சேர்த்து கறியை நன்கு கொதிக்க விடவும்.

8. உருளைக்கிழங்குகளை லேசாக மசித்து விடவும். இவ்வாறு செய்தால் கறி தடிமனாக மாறிவிடும்.

9. இப்போது, உங்களுடைய ஆலுமட்டர் சப்ஜி பறிமாறத் தயாராக உள்ளது. அடுப்பை அணைத்த பின்னர் ஆலுமட்டர் கறியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி விடவும்.

10. துண்டாக்கப்பட்ட கொத்தமல்லியை ஆலுமட்டர் கறியின் மீது தூவி அதை அழகுபடுத்தவும்.

 

Advertisements

கடாய் பன்னீர் (kadaai paneer)

 

தேவையான பொருட்கள்:

பன்னீர் – 200 கிராம்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
கிராம்பு – 4
பட்டை – 1
பூண்டு – 4 பற்கள்
பச்சை மிளகாய் – 1 (நீளமாக கீறியது)

செய்முறை:

முதலில் பன்னீரை துண்டுகளாக்கி, சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாய்/வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு 5 நிமிடம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

பின் அதில் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து, உப்பு தூவி 1 நிமிடம் கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க விட வேண்டும்.

பிறகு அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, 2 நிமிடம் வேக வைத்து அடுப்பில் இருந்து இறக்கினால், கடாய் பன்னீர் ரெடி!!!

பன்னீர் பட்டர் மசாலா

Paneer Peas Masala Recipe

தேவையான பொருட்கள்:

பன்னீர் – 2 பாக்கெட் (துண்டுகளாக்கப்பட்டது)

வெங்காயம் – 2 (நறுக்கியது)

தக்காளி – 2 (நறுக்கியது)

பச்சை மிளகாய் – 4

குடைமிளகாய் – 1 (நறுக்கியது)

பச்சை பட்டாணி – 1 கப்

மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

சீரகப் பொடி – 1 டீஸ்பூன்

பட்டை – 1 இன்ச்

பட்டர் – 3 டேபிள் ஸ்பூன்

பால் – 1 கப்

கொத்தமல்லி – சிறிது

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், பன்னீர் துண்டுகளைப் போட்டு, சிறிது நேரம் வைத்து, பின் நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பட்டர் போட்டு காய்ந்ததும், பட்டையைப் போட்டு தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு அதில் அனைத்து மசாலா பொடியையும் சேர்த்து கிளறி, தக்காளியை சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்க வேண்டும்.

பிறகு அந்த கலவையை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும். அடுத்து அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தைப் போட்டு தாளித்து, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் குடைமிளகாய், பட்டாணி, பச்சை மிளகாய் சேர்த்து பிரட்டி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும்.

காய்கறிகள் வெந்ததும், பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, பால் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லி தூவினால், பன்னீர் பட்டர் மசாலா ரெடி!

பச்சரிசி முறுக்கு (pacharisi murukku)

murukku

தேவையான பொருள்கள்

பச்சரிசி – 4 கப்
உளுந்து -1/4 கப்
பாசிப் பருப்பு – 1/4 கப்
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
வெள்ளை எள் – 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை
பச்சரிசியை கழுவி ( ஊற வைக்கக்கூடாது ) நன்றாக காய வைக்கவேண்டும்.

உளுந்து, பாசிப்பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் போட்டு லேசாக வறுத்துக்கொள்ளவேண்டும்.

காய்ந்த பச்சரிசி, உளுந்து, பாசிப்பருப்பு மூன்றையும் சேர்த்து மாவுமெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முருக்குமாவு, வெண்ணெய், எள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பக்குவமாக பிசைந்து முருக்கு உரலில் இட்டு பிழிந்து எடுக்கவும். இந்த முருக்கு நல்ல மொறுமொறுப்புடன் ருசியாக இருக்கும்.

நாட்டுகோழி ரசம்/NAATU KOZHI RASAM

ccs

தேவையான பொருட்கள்

நாட்டு கோழி  – அரை கிலோ
சின்ன வெங்காயம் – 15
சீரகம்  – 1  ஸ்பூன்
மிளகு  – 2   ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
தக்காளி – 2
இஞ்சி    பூண்டு –  பேஸ்ட்  -2   ஸ்பூன்
பட்டை, லவங்கம் – தலா 1
மிளகாய்த்தூள் – 1   ஸ்பூன்
தனியாத்தூள் – 1   ஸ்பூன்
மஞ்சள்தூள் –   அரை  ஸ்பூன்
கருவேப்பிலை  , மல்லி இலை – தேவையான அளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

குக்கரில்  எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு  மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.

மிளகு , சீரகம்  இரண்டையும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

பொடித்த  மிளகு , சீரகம்    , மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி   சேர்த்து நன்கு கலக்கி,  தேவையான அளவு தண்ணீர்  ஊற்றி   7  விசில் வரும் வரை வேக விடவும்.

இறக்கி வைத்து   கருவேப்பிலை  , மல்லி இலை   தூவி  பரிமாறவும்.நாட்டு கோழி  ரசம் சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். தனியாக சூப் மாதிரியும்  சாப்பிடலாம்.

சீசுவான் சில்லி பேபி கார்ன் (SCHEZWAN CHILLI BABY CORN)

SCBC

தேவையான பொருட்கள்

பேபி கார்ன் – 1/4 கப்

குடைமிளகாய் – 1/4 கப்

பெரிய வெங்காயம் – 1/2 (பொடியாக நறுக்கியது)

பூண்டு – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – 1/4 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

சோயா சாஸ் – 1 டீஸ்பூன்

சீசுவான் சாஸ் – 1 டீஸ்பூன்

தக்காளி சாஸ் – 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன் + 1/4 டீஸ்பூன்

தண்ணீர் – தேவையான அளவு

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

ஊற வைப்பதற்கு…

சோள மாவு – 1 டேபிள்

ஸ்பூன் மைதா – 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

சீசுவான் சாஸ் செய்வதற்கு…

வரமிளகாய் – 30

பூண்டு – 15 பற்கள் (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

சோயா சாஸ் – 1/4 டீஸ்பூன்

வினிகர் – 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

சீசுவான் சாஸ் செய்யும் முறை:

முதலில் வரமிளகாயை சுடுநீரில் போட்டு, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மிளகாயை தனியாக மிக்ஸியில் போட்டு, சிறிது அந்த நீரை ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, இஞ்சி சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள மிளகாய் பேஸ்ட் சேர்த்து 3-5 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

எப்போதும் மிளகாய் பேஸ்ட்டில் இருந்து எண்ணெய் பிரிகிறதோ, அப்போது சோயா சாஸ், வினிகர், தக்காளி சாஸ், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் குறைவான தீயில் நன்கு வேக வைத்து இறக்கி, ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

சீசுவான் சில்லி பேபி கார்ன் செய்யும் முறை:

முதலில் ஒரு பௌலில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு தண்ணீர் ஊற்றி, ஓரளவு நீராக கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதில் பேபி கார்ன் துண்டுகளை சேர்த்து பிரட்டி விட வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி,பேபி கார்ன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அதில் பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து தீயை அதிகரித்து நன்கு வதக்க வேண்டும். பின் அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், சீசுவான் சாஸ், 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, மீதமுள்ள சோள மாவு கலவையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின், அதில் வறுத்து வைத்துள்ள பேபி கார்ன்துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், சீசுவான் சில்லி பேபி கார்ன் ரெடி!!!

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு

MK

தேவையான பொருட்கள்:

மீன் – 10 துண்டுகள்

தக்காளி – 5 சிறியது

சின்ன வெங்காயம் – 15-20 (பொடியாக நறுக்கியது)

பூண்டு – 10-15 பற்கள்

கறிவேப்பிலை – சிறிது

மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

சாம்பார் பொடி-1 டேபிள் ஸ்பூன்

சீரகப் பொடி – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிது

புளி – 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)

தாளிக்க:

நல்லெண்ணெய்  – 1 டேபிள் ஸ்பூன்

சோம்பு – சிறிதளவு

சீரகம் – சிறிதளவு

வெந்தயம் – சிறிதளவு

செய்முறை:

முதலில் மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, அதில்  பின் அதில் நல்லெண்ணெய்  ஊற்றி சோம்பு,சீரகம்,வெந்தயம்,கறிவேப்பிலையை சேர்த்து வதக்கி பின் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கி, பின் சீரகப் பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

பிறகு அதில்  தக்காளியை சேர்த்து, 8-10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

அடுத்து, அதில் மிளகாய் தூள்,சாம்பார் பொடி சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி,புளிச்சாறு சேர்த்து 15 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின் அதில் மீன் துண்டுகளை சேர்த்து, குறைவான தீயில் மூடி வைத்து 10 நிமிடம் மீனை வேக வைக்க வேண்டும்.

மீனானது நன்கு வெந்ததும்,  கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான செட்டிநாடு மீன் குழம்பு  ரெடி!!!