சீசுவான் சில்லி பேபி கார்ன் (SCHEZWAN CHILLI BABY CORN)

SCBC

தேவையான பொருட்கள்

பேபி கார்ன் – 1/4 கப்

குடைமிளகாய் – 1/4 கப்

பெரிய வெங்காயம் – 1/2 (பொடியாக நறுக்கியது)

பூண்டு – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – 1/4 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

சோயா சாஸ் – 1 டீஸ்பூன்

சீசுவான் சாஸ் – 1 டீஸ்பூன்

தக்காளி சாஸ் – 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன் + 1/4 டீஸ்பூன்

தண்ணீர் – தேவையான அளவு

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

ஊற வைப்பதற்கு…

சோள மாவு – 1 டேபிள்

ஸ்பூன் மைதா – 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

சீசுவான் சாஸ் செய்வதற்கு…

வரமிளகாய் – 30

பூண்டு – 15 பற்கள் (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

சோயா சாஸ் – 1/4 டீஸ்பூன்

வினிகர் – 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

சீசுவான் சாஸ் செய்யும் முறை:

முதலில் வரமிளகாயை சுடுநீரில் போட்டு, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மிளகாயை தனியாக மிக்ஸியில் போட்டு, சிறிது அந்த நீரை ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, இஞ்சி சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள மிளகாய் பேஸ்ட் சேர்த்து 3-5 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

எப்போதும் மிளகாய் பேஸ்ட்டில் இருந்து எண்ணெய் பிரிகிறதோ, அப்போது சோயா சாஸ், வினிகர், தக்காளி சாஸ், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் குறைவான தீயில் நன்கு வேக வைத்து இறக்கி, ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

சீசுவான் சில்லி பேபி கார்ன் செய்யும் முறை:

முதலில் ஒரு பௌலில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு தண்ணீர் ஊற்றி, ஓரளவு நீராக கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதில் பேபி கார்ன் துண்டுகளை சேர்த்து பிரட்டி விட வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி,பேபி கார்ன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அதில் பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து தீயை அதிகரித்து நன்கு வதக்க வேண்டும். பின் அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், சீசுவான் சாஸ், 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, மீதமுள்ள சோள மாவு கலவையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின், அதில் வறுத்து வைத்துள்ள பேபி கார்ன்துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், சீசுவான் சில்லி பேபி கார்ன் ரெடி!!!

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு

MK

தேவையான பொருட்கள்:

மீன் – 10 துண்டுகள்

தக்காளி – 5 சிறியது

சின்ன வெங்காயம் – 15-20 (பொடியாக நறுக்கியது)

பூண்டு – 10-15 பற்கள்

கறிவேப்பிலை – சிறிது

மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

சாம்பார் பொடி-1 டேபிள் ஸ்பூன்

சீரகப் பொடி – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிது

புளி – 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)

தாளிக்க:

நல்லெண்ணெய்  – 1 டேபிள் ஸ்பூன்

சோம்பு – சிறிதளவு

சீரகம் – சிறிதளவு

வெந்தயம் – சிறிதளவு

செய்முறை:

முதலில் மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, அதில்  பின் அதில் நல்லெண்ணெய்  ஊற்றி சோம்பு,சீரகம்,வெந்தயம்,கறிவேப்பிலையை சேர்த்து வதக்கி பின் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கி, பின் சீரகப் பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

பிறகு அதில்  தக்காளியை சேர்த்து, 8-10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

அடுத்து, அதில் மிளகாய் தூள்,சாம்பார் பொடி சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி,புளிச்சாறு சேர்த்து 15 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின் அதில் மீன் துண்டுகளை சேர்த்து, குறைவான தீயில் மூடி வைத்து 10 நிமிடம் மீனை வேக வைக்க வேண்டும்.

மீனானது நன்கு வெந்ததும்,  கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான செட்டிநாடு மீன் குழம்பு  ரெடி!!!